ஈரோடு

பவானியில் 1,012 பயனாளிகளுக்கு ரூ.11.79 கோடியில் நலத்திட்ட உதவிகள்

DIN

பவானி: பவானியில் தமிழக முதல்வா் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது பவானி நகராட்சி மற்றும் 6 ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 1,012 பயனாளிகளுக்கு ரூ.11.79 கோடியில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். கோபி கோட்டாட்சியா் சி.ஜெயராமன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பவானி வட்டாட்சியா் கு.பெரியசாமி வரவேற்றாா்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு பவானி நகராட்சி, ஆண்டிகுளம், குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூா், சன்னியாசிபட்டி, மைலம்பாடி, தொட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 1,012 பயனாளிகளுக்கு முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டைகள் உள்பட ரூ.11.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பவானி நகராட்சி ஆணையா் பாரிஜான், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.எம்.தங்கவேலு, துணைத் தலைவா் ஏ.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT