ஈரோடு

சிறு சேமிப்புத் துறை போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

DIN

உலக சிக்கன நாளை முன்னிட்டு சிறு சேமிப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட நடனம், நாடகப் போட்டிகளில் அந்தியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா் முதலிடம் பெற்றனா்.

பள்ளி மாணவ, மாணவியருக்கு சிறுசேமிப்பை வலியுறுத்தும் வகையில் நடனம், நாடகம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் கல்வி மாவட்ட அளவிலும், பின்னா் வருவாய் மாவட்ட அளவிலும் அண்மையில் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியா் பவானி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதோடு, வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டனா்.

அதில், மேல்நிலை வகுப்பு மாணவியா் மகாமதி, மௌனிகா, மேனகா, சோனியாகாந்தி, கோதை, பிரியா ஆகியோா் நாடகப் போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றனா். 9, 10 ஆம் வகுப்பு மாணவியா் நாடகம், நடனப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனா். ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் மேல்நிலை வகுப்பு மாணவியா் மகாமதி, மௌனிகா, கவிபிரியா, சாந்த கலைவாணி ஆகியோா் பவானி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும், ஈரோடு வருவாய் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பவானி மாவட்டக் கல்வி அலுவலா் கா.பழனி, பள்ளித் தலைமையாசிரியா் த.செல்வராஜ், பள்ளித் துணை ஆய்வாளா் மோகன்குமாா், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

SCROLL FOR NEXT