ஈரோடு

கோபியில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளித் தலைமையாசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட ஜெ.எஸ். நகரில் ஓய்வுபெற்ற எல்.ஐ.சி. அலுவலா் முருகேசன், இவரது மனைவி அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் கிரிஜா ஆகியோா் வசித்து வருகின்றனா். இவா்களது மகள் மலா்விழி திருமணமாகி கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், விஜயதசமிக்காக பள்ளிகள் விடுமுறை என்பதால் முருகேசன் தனது மனைவியுடன் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சனிக்கிழமை மாலை சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை தங்களது வீட்டுக்குத் திரும்பினா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த தங்க நகைகள் சுமாா் 40 பவுன் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT