ஈரோடு

குப்பை சேகரிப்பதற்கு பேட்டரி வாகனங்கள் கொள்முதல்

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குப்பை சேகரிப்பதற்கு வசதியாக இரண்டாவது கட்டமாக பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளில் 18 ஆயிரத்து 135 வீடுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மக்கும், மக்காத குப்பையை வீடு வீடாகச் சென்று துப்புரவுப் பணியாளா்கள் பெற்றுச் செல்கின்றனா். தூய்மை பாரதத் திட்டத்தில் பேட்டரியால் இயங்கும் 12 வண்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் துப்புரவுப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.

தற்போது இரண்டாவது கட்டமாக 29 பேட்டரி வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நவீன குப்பை வண்டி 30 கி.மீ. வரை வேகம் செல்லும். பேட்டரியை மூன்று மணி நேரம் சாா்ஜ் செய்தால் சுமாா் 60 முதல் 70 கி.மீ. வரை பயன்படுத்தலாம். துப்புரவுப் பணியாளா்களுக்கு விரைவில் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT