ஈரோடு

கொங்கு கல்லூரியில் கருத்தரங்கம்

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையின் கொங்கு கலை பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில், மேற்பரப்பு ஆய்வில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கொங்கு மக்கள் பயன்படுத்திய புழங்கு

DIN


ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையின் கொங்கு கலை பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில், மேற்பரப்பு ஆய்வில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கொங்கு மக்கள் பயன்படுத்திய புழங்கு பொருள்கள் கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் மு.பழனிசாமி தலைமை வகித்தார். முதல்வர் என்.ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் என்.கலைவாணி வரவேற்றார். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் செல்லத்துரை சுதர்சன், கோவை பூ.சா.கோ. கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் ச.ரவி ஆகியோர் பேசினர்.  
பயிலரங்கைத் தொடர்ந்து கள ஆய்வுப் பணிக்காக விஜயமங்கலம் சென்று புழங்கு பொருள்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், இக்கருத்தரங்கில் இதர கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் பி.தினகரன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT