ஈரோடு

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய ஈரோடு மாவட்டம்

DIN

ஞாயிற்றுகிழமை 6 ஆவது வாரமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் ஈரோடு மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின.

கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் ஊடுருவி தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு  தளர்வுகளுடன் அமலில் உள்ளது. எனினும் வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த ஜூலை மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஈரோட்டில் 6 ஆவது  வாரமாக தளர்விவில்லாத ழுழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  50 ஆயிரம் விசைத்தறிகள் , தொழிற்சாலைகள் , 10 ஆயிரம் ஜவுளிக்கடைகள், 206 டாஸ்மாக் கடைகள் , நேதாஜி காய்கறி மார்க்கெட் சின்ன மார்க்கெட், உழவர் சந்தைகள், நகைக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

ஈரோட்டில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பன்னீர்செல்வம் பார்க், ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், காந்தி ரோடு, ஸ்வஸ்திக் கார்ன,ர் காளைமாடு சிலை, சென்னிமலை ரோடு போன்ற பகுதிகள் மக்கள்  நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ஆனால்  அத்தியாவசிய பொருட்களான பால் ,மருந்தகம் வழக்கம்போல் செயல்பட்டது. மேலும் அம்மா உணவகமும் வழக்கம் போல் செயல்பட்டன. முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பெயரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்கள் அனைத்தும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கி மீறி ஒரு சிலர் வெளியே சுற்றுபவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைப்போல் கோபி, பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, பவானிசாகர் உட்பட பகுதிகளில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT