முகப்பு
ஈரோடு

மகளிர் கூட்டமைப்பினருக்கு டிராக்டர், வேளாண் கருவிகள்: எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

ஈரோட்டில் தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகளை வாடகை மையம் அமைத்து மகளீர் கூட்டமைப்பினருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

ஈரோட்டில் தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகளை வாடகை மையம் அமைத்து மகளீர் கூட்டமைப்பினருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

தமிழக அரசின் சார்பில் மகளிருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசின் வேளாண் துறையின் சார்பில் மகளீர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவும் வகையில்  வேளாண்மை கருவிகள் மூலம்  வாடகை மையம் தமிழகம் முழுவதும் அமைத்து தரப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கதிரம்பட்டி, பேரோடு, எலவமலை, மேட்டு நாசுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மகளீர் சுய உதவிக்குழுகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகள்  மானிய விலையில் வழங்கபட்டு வாடகை மையம் அமைத்து தரப்பட்டுள்ளது. 

இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு அதனை தொடங்கி வைத்தனர். மேலும் வாடகை மையத்திற்கு வழங்கப்பட்ட டிராக்டரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓட்டி பார்த்தும் வழங்கினர். 

இந்தநிகழ்ச்சியில்  அதிமுக ஈரோடு ஒன்றிய செயலாளர் பூவேந்தன், பகுதி கழக செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஸ், தங்கமுத்து, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி, ஆவின் துணை தலைவர் குணசேகரன், மற்றும் மகளீர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →