முகப்பு
ஈரோடு

நந்தா பொறியியல் கல்லூரியில் தானியங்கி கை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர், ஆசிரியர் தானியங்கி கை சுத்தம் செய்யும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கண்டுபிடிப்பை விளக்கும் மாணவர் பூபேஷ்
பகிர்:

நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர், ஆசிரியர் தானியங்கி கை சுத்தம் செய்யும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள சுலபமான மற்றும் எளிதான முறையில் கைகளை சுத்தம் செய்யக்கூடிய இரண்டு விதமான தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரங்களை மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையினை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் ஆர்.கே.பூபேஷ் மற்றும் விரிவுரையாளர் எம்.சீனிவாசன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படைப்புகளை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமையில், கல்லூரியின் முதல்வர் என்.ரெங்கராஜன், மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையின் புலமுதல்வர் எஸ்.கவிதா மற்றும் முனைவர் சி.என். மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில், கல்லூரியின் கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மைய அலுவலகத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.  

பின்னர் கல்லூரியினை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறைகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டு விதமான தானியங்கி சுத்திகரிப்பு படைப்புகள் இயக்கும் மற்றும் இயங்கும் விதத்தினை செயல் விளக்கங்கள் மூலம் விரிவாக எடுத்துத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து இயந்திர கண்டுபிடிப்பாளர்கள் இருவரும் கூறியதாவது, “பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கைகளை மிக எளிமையாகவும் மற்றும் விரைவாகவும் சுத்தம் செய்ய இந்த இயந்திரம் உதவும்.  இதன் உற்பத்தியினை பெருக்கி அனைத்து தரப்பினரும் குறைந்த விலையில் வாங்கி பயன்பெற கல்லூரி நிர்வாகத்தினர் பல்வேறு வகையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என்றனர்.

தானியங்கி சுத்திகரிப்பு படைப்புகளை உருவாக்கிய மாணவர் ஆர்.கே.பூபேஷ் மற்றும் விரிவுரையாளர் எம்.சீனிவாசன் ஆகியோரை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநர் ஜெ. செந்தில் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →