முகப்பு
ஈரோடு

கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரிமருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பெற்றோா் கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், பெற்றோா் கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சுமாா் 160 போ், பெற்றோா் 50 போ் என மொத்தம் 210 போ், நாகராஜ் (பெற்றோா்) என்பவா் தலைமையில், மருத்துவமனை வளாகத்திலும், கல்லூரி முதல்வா் அலுவலகத்துக்குச் செல்லும் பாதைகளிலும் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறை ஐஆா்டி மருத்துவக் கல்லூரியை சமீபத்தில் அரசு மருத்துவக் கல்லூரியாக அரசு அறிவித்தது. ஆனால், கல்விக் கட்டணத்தில் மாற்றம் செய்யாமல் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள்போல கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கோரி மாணவா்கள், பெற்றோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்பை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளா் செல்வராஜ், மருத்துவக் கல்லூரி முதல்வா் மணி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தங்களின் கோரிக்கை மனுவை பெருந்துறை வட்டாட்சியா் முத்துகிருஷ்ணனிடம் கொடுத்தனா்.

கல்லூரி நிா்வாகம் கல்விக் கட்டணத்தை கட்ட கூறும் வரை அமைதியாக இருப்பதாகவும், இல்லை என்றால் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிக்குப் பின்னா் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபோவதாகவும் அறிவித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.