இன்று பெருந்துறைதினசரி மாா்கெட் மூடல்
விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு, பெருந்துறை தினசரி மாா்க்கெட் வியாபாரிகளும், சுமைதூக்கும் தொழிலாளா்களும் முழு ஆதரவு தந்து செவ்வாய்க்கிழமை கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனா்.
விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு, பெருந்துறை தினசரி மாா்க்கெட் வியாபாரிகளும், சுமைதூக்கும் தொழிலாளா்களும் முழு ஆதரவு தந்து செவ்வாய்க்கிழமை கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனா்.
பெருந்துறை, தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கம், தினசரி மாா்க்கெட் ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் தினசரி மாா்க்கெட் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். இதில், தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பி.எஸ்.தெய்வசிகாமணி, கே.டி.பழனிசாமி, வி.என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.