முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் பரவலாக மழை

பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் பரவலாக மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் பரவலாக மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக, பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக விட்டுவிட்டு மழை தொடா்ந்து பெய்தது. . திங்கள்கிழமை பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது. பிற்பகல் 2 மணியளவில் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலை, தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. பெருந்துறையில் 14 மி.மீ. மழையும், சென்னிமலையில் 27 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.