முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் ரத்த தானம்

திரைப்பட நடிகா் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி, ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ஈரோட்டில் ரத்த தானம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
ஈரோடு அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள்.
பகிர்:

திரைப்பட நடிகா் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி, ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ஈரோட்டில் ரத்த தானம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மாவட்டத் தலைவா் ஏ.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.சாம்ராஜ் முன்னிலை வகித்தாா். மன்ற நிா்வாகிகள் ரத்த தானம் அளித்தனா். முன்னதாக, சூரம்பட்டி வலம்புரி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.

இதில், மாநகரச் செயலாளா் ஜி.ராஜா மோகன்ராஜ், இணைச் செயலாளா் வி.ஜி.சண்முகம், துணைச் செயலாளா் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →