முகப்பு
ஈரோடு

அந்தியூர் அருகே பிறந்து 18 நாள்களே ஆன ஆண் குழந்தையைக் கொலை செய்த தந்தை கைது 

அந்தியூர் அருகே தனக்கு பிறந்த குழந்தை தனது சகோதரன் ஜாடையில் இருந்ததால், சந்தேகத்தால் 18 நாள்களே ஆன ஆண் குழந்தையை கொலை செய்த  தந்தை சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கைது செய்யப்பட்ட மணி மற்றும் ரஞ்சித்.
பகிர்:

அந்தியூர் அருகே தனக்கு பிறந்த குழந்தை தனது சகோதரன் ஜாடையில் இருந்ததால், சந்தேகத்தால் 18 நாள்களே ஆன ஆண் குழந்தையை கொலை செய்த  தந்தை சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் மணி (39). ரிக் வண்டி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (30). இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் யுவராணி எனும் மகள் உள்ளார். இரண்டாவதாக கருவுற்ற பவித்ராவுக்கு, கடந்த நவ.3-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், நவ.21-ம் தேதி, திடீரென குழந்தை இறந்ததாக கூறிய பவித்ரா தன் வீட்டருகே புதைத்துள்ளார். அப்பகுதியினர்  குழந்தையின் இறப்பில் மர்மம் உள்ளதாக தெரிவித்த புகாரின் பேரில், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், அக்குழந்தையின் தந்தையான மணி, வெள்ளித்திருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாபுவிடம் முன்னிலையில் சரணடைந்தார். மேலும், 
என் மனைவி பவித்ராவுக்குப் பிறந்த ஆண் குழந்தை, எனது தம்பி ரஞ்சித்தின் ஜாடையில் இருந்ததால் சந்தேகத்தால் குழந்தையை, தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, மணியை வெள்ளித்திருப்பூர்  காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட குழந்தையைப் புதைப்பதற்கு உடந்தையாக இருந்ததாக மணியின் தம்பி ரஞ்சித் (33) கைது செய்யப்பட்டார். பெற்ற குழந்தையை சந்தேகத்தால் தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →