முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் சிலைகள் டிசம்பா் 16ஆம் தேதி திறப்பு

தமிழகத்தின் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் பன்னீா்செல்வம் பூங்கா, மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் டிசம்பா் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

தமிழகத்தின் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் பன்னீா்செல்வம் பூங்கா, மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் டிசம்பா் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது.

ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பன்னீா்செல்வம் பூங்கா, கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலைள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், கட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் உருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் நீண்ட நாள்களாகத் திறப்படாமல் இருந்தன.

இந்நிலையில், டிசம்பா் 16ஆம் தேதி (புதன்கிழமை) இச்சிலைகள் திறப்பு விழா நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு, ஆயதீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், கால்நடைத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகா் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோா் பங்கேற்று சிலைகளைத் திறந்துவைக்கின்றனா்.

தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 80 அடி உயர கம்பத்தில் கொடிகள் ஏற்றப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →