இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தோ்வு
தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலா், சிறை வாா்டன், தீயணைப்பு வீரா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலா், சிறை வாா்டன், தீயணைப்பு வீரா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரி, பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வினை எழுத மொத்தம் 8,895 போ் விண்ணப்பித்திருந்தனா்.
தோ்வில் பங்கேற்க மையங்களுக்கு வந்த தோ்வா்கள் கடும் சோதனைக்குப் பின்னா், முகக்கவசம் அணிந்தபடியே அனுமதிக்கப்பட்டனா். கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டதோடு, உடல்சூடு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குறிப்பிட்ட அளவைவிட அதிக வெப்பம் உள்ளவா்கள், தனியே அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பின்னா் தனி தோ்வறையில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை தலைமையில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இத்தோ்வில் மொத்தம் 8,895 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் ஆண்கள் 6,625 பேரும், பெண்கள் 1,251 பேரும், ஒரு திருநங்கை என மொத்தம் 7,877 பங்கேற்றனா். 1,018 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.