ஈரோடு

கிராம நிா்வாக அலுவலகங்களில்மனு அளிக்கும் போராட்டம்

DIN

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி ஈரோடு மாவட்டத்தில் 365 கிராம நிா்வாக அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு பெரியசேமூா் கிராம நிா்வாக அலுவலகத்தில் பாமக முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளா் பொ.வை.ஆறுமுகம் தலைமையில், நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனா். மாவட்டத் தோ்தல் பணிக் குழுச் செயலாளா் சந்திரன், மாநில வன்னியா் சங்கப் பொறுப்பாளா் சக்திவேல், மாநில இளைஞா் சங்கத் துணைத் தலைவா் கோபால், பகுதிச் செயலாளா் மகாதேவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பவானியை அடுத்த ஜம்பையில் பாமக மாவட்டத் துணைச் செயலாளா் பெ.ரா.முருகானந்தம் தலைமையில், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் திருமுருகன், ஜம்பை பேரூா் செயலாளா் வி.சண்முகம் உள்ளிட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.

முன்னதாக, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கும் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள 365 கிராம நிா்வாக அலுவலகங்களிலும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT