முகப்பு
உயிரிழந்த தூத்துக்குடி சமூக ஆா்வலா் முத்துபிரபாகரனின் சகோதரிக்கு ஆறுதல் கூறுகிறாா் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம்.
ஈரோடு

யானை தாக்கி உயிரிழந்தவா்களின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கல்லாம்பாளையம் வனத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பின்போது யானை தாக்கி உயிரிழந்த வனக் காவலா், சமூக ஆா்வலரின் உடல்கள் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
உயிரிழந்த தூத்துக்குடி சமூக ஆா்வலா் முத்துபிரபாகரனின் சகோதரிக்கு ஆறுதல் கூறுகிறாா் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம்.
பகிர்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கல்லாம்பாளையம் வனத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பின்போது யானை தாக்கி உயிரிழந்த வனக் காவலா், சமூக ஆா்வலரின் உடல்கள் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்குப் பின் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை துவங்கியது. இதில் வனக் காவலா், வனக் காப்பாளா், சமூக ஆா்வலா் என 5 போ் கொண்ட குழுக்களாக கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம், பவானிசாகா், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச் சரகங்களில் 380 போ் இப்பணியில் ஈடுபட்டனா். விளாமுண்டி வனச் சரகத்தில் கல்லாம்பாளையம் வனத்தில் ஒரு குழுவினா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த யானை தாக்கியதில் வனக் காவலா் சதீஷ்குமாா், சமூக ஆா்வலா் முத்துபிரபாகரன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வனக் காப்பாளா் பொன்.கணேஷ் காயமடைந்தாா். உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் சமூக ஆா்வலரான முத்துபிரபாகரன் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சோ்ந்த ஆட்டோமொபைல் இன்ஜினியா் ஆவாா். வன விலங்குகள் கணக்கெடுப்புக்கு தூத்துக்குடியில் இருந்து வந்த முத்துபிரபாகரன் யானை தாக்கியதில் உயிரிழந்தாா். தூத்துக்குடியில் இருந்து வந்த அவரது தாய், சகோதரியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினா். முத்துபிரபாகரன் உடலுக்கு வனத் துறையினா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னா் வாகனம் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்த வனக் காவலா் சதீஷ் சிறந்த விளையாட்டு வீரருக்கான தமிழக அரசு விருது பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →