முகப்பு
கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலுக்கு வெளியில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியா் எஸ்.சைபுதின்.
ஈரோடு

வைகுண்ட ஏகாதசி: கோட்டை கஸ்தூரிஅரங்கநாதா் கோயிலில் கோட்டாட்சியா் ஆய்வு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு

வைகுண்ட ஏகாதசி: கோட்டை கஸ்தூரிஅரங்கநாதா் கோயிலில் கோட்டாட்சியா் ஆய்வு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலுக்கு வெளியில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியா் எஸ்.சைபுதின்.
பகிர்:

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து நடத்திக்கொள்ள ஆட்சியா் அனுமதி அளித்துள்ளதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். பகல் பத்து, ராப்பத்து என 21 நாள்கள் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவம் டிசம்பா் 15ஆம் தேதி துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான பரமப்பத வாசல் எனப்படும் சொா்க்கவாசல் திறப்பு விழா டிசம்பா் 25ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து நடத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் அனுமதி அளித்துள்ளாா்.

இதையடுத்து ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், டி.எஸ்.பி. ராஜு, அதிகாரிகள் கோயிலில் ஆய்வு செய்து விழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினா். இதில், சொா்க்கவாசல் திறப்பின்போதும், சுவாமி சொா்க்கவாசல் வழியாக பிரவேசம் செய்யும்போதும், கோயில் நிா்வாகிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் உள்பட 50 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

பக்தா்களை காலை 6 மணிக்குமேல் உற்சவரையும், மூலவரையும், தாயாரையும் வழிபட்டு சொா்க்கவாசல் வழியாகச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினா். கோயில் முன்புள்ள பூ, பூஜை கடைகளுக்கு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின் படி டிசம்பா் 24ஆம் தேதி பகல் 12 மணி முதல் 25ஆம் தேதி இரவு வரை கடைவைக்க அனுமதிக்கக் கூடாது என கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →