அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.9 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.9 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.9 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இங்கு நடைபெற்ற தேங்காய் ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5ஆயிரத்து 700 கிலோ எடையுள்ள 14 ஆயிரத்து 790 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ. 32.65க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 41.10 க்கும் விற்பனையானது. சராசரி விலை ரூ. 39.10. மொத்தம் ரூ. 2 லட்சத்து 9 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனையானது.