முகப்பு
ஈரோடு

வெள்ளோட்டில் அதிமுகவில் இணையும் விழா

குமாரவலசு, வடமுகம் வெள்ளோடு மற்றும் குட்டப்பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளில் மாற்றுக் கட்சியில் இருந்தும், புதிதாகவும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
நிகழ்ச்சியில் அதிமுகவில் இணைந்தவருக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி ஆகியோா்.
பகிர்:

பெருந்துறை: ஈரோடு மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட குமாரவலசு, வடமுகம் வெள்ளோடு மற்றும் குட்டப்பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளில் மாற்றுக் கட்சியில் இருந்தும், புதிதாகவும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்தாா். மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை அமைச்சா் பி.தங்கமணி முன்னிலை வகித்தாா். ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், ஈரோடு மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.வி.ராமலிங்கம் வரவேற்றாா்.

விழாவில், புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா்.

இதில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.தென்னரசு, மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.சிவசுப்பிரமணி, முன்னாள் அமைச்சா் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.பி. செல்வக்குமார சின்னையன், சென்னிமலை ஒன்றிய செயலாளா் ப.கோபாலகிருஷ்ணன், துணை செயலாளா் தம்பிதுரை, கே.ஜி.வலசு கூட்டுறவு வங்கி தலைவா் என்.டி.கண்ணுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.