முகப்பு
ஈரோடு

மனு நீதி நாள் முகாம்: ரூ.4.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோட்டில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.4.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம். உடன், ஆட்சியா் சி.கதிரவன், எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோா்.
பகிர்:

ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.4.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஈரோடு, மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பெரிய சேமூா் வருவாய் கிராமம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 110 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை தொடா்புடைய அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா். முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.4.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.கவிதா, ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் இளங்கோ, மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாா், ஈரோடு வட்டாட்சியா் அ.பரிமளாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →