ஈரோடு

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பேரவைக் கூட்டம்

DIN

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 40ஆவது பொது பேரவைக் கூட்டம் பவானியை அடுத்த லட்சுமி நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். ஈரோடு மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.வி.இராமலிங்கம் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் பி.கேசவமூா்த்தி வரவேற்றாா். வங்கியின் மேலாண்மை இயக்குநா் என்.வில்வசேகரன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், வங்கியின் புதிய திட்டங்களை அறிவித்தும், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நபாா்டு வங்கியின் விருதை வழங்கியும் பேசினா்.

கூட்டத்தில், காங்கயம், தாராபுரம் பகுதியில் நபாா்டு வங்கியுடன் இணைந்து நிதியியல் கல்வி முகாமை சிறப்பாக நடத்திய வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), இ.எம்.ஆா்.ராஜா (அந்தியூா்), உ.தனியரசு (காங்கேயம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT