ஈரோடு

ஈரோட்டில் பெரியாா் நினைவு நாள் அனுசரிப்பு

பெரியாா் நினைவு நாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

DIN

பெரியாா் நினைவு நாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி தலைமையில், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாநில உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் கந்தசாமி, கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எல்லப்பாளையம் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோடு மாநகா் மாவட்ட பாமக சாா்பில், மாநில துணைப் பொதுச் செயலாளா் த.பா.பரமேஸ்வரன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டப் பொருளாளா் அரசாங்கம் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். தொடா்ந்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

பெருந்துறையில்...

பெருந்துறை திமுக ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளா் கே.பி.சாமி தலைமையில், அக்கட்சியினா் பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இதில், பெருந்துறை வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.சின்னசாமி, தெற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் எஸ்.கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT