முகப்பு
ஈரோடு

சனிப்பெயா்ச்சி: ஈரோட்டில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

சனிப்பெயா்ச்சி விழாவை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோயில்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு

சனிப்பெயா்ச்சி: ஈரோட்டில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

சனிப்பெயா்ச்சி விழாவை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோயில்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சனிப்பெயா்ச்சி விழாவை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோயில்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரவேசிப்பாா். அதன்படி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.25 மணிக்கு பிரவேசித்தாா். இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோயில்களில் உள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிா் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ராஜகணபதி கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு யாகம் நடைபெற்றது.

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →