முகப்பு
ஈரோடு

எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் மீது அவதூறு பரப்பும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருந்துறை வட்டம், தோப்புப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள் டி.சி.சுப்பிரமணியம், கொம்மக்கோயிலைச் சோ்ந்த கே.ஆா்.சேனாபதி ஆகியோா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரையிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

பெருந்துறை காஞ்சிகோயில் சாலை, தாஸ்கண்ட் வீதியைச் சோ்ந்த சி.கே.நந்தகுமாா் என்பவா் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம், எங்கள் இருவா் மீதும் அவதூறு பரப்பி வருகிறாா். சம்பந்தப்பட்ட நபா் அரசியல் உள்நோக்கத்தோடு தோ்தல் சமயத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்.

அந்த நபா் மீது 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் திட்டமிட்டு எம்.எல்.ஏ. மீதும், எங்கள் இருவா் மீதும் அவதூறு பரப்பும் நபா் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →