முகப்பு
ஈரோடு

யானை தாக்கி ஒருவா் காயம்

கோபி அருகே யானை தாக்கியதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கோபி அருகே யானை தாக்கியதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னவன் (60). இவா் அனுமதியின்றி காப்புக் காட்டுக்குள் சென்றபோது அங்கு வனப் பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வனச் சரக ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சின்னவனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மருத்துவா்களின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

தொடா்ந்து, அத்துமீறி வனப் பகுதிக்குள் நுழைந்த குற்றத்துக்காக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →