இலவச செல்லிடப்பேசி: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
அரசால் இலவசமாக வழங்கப்படும் செல்லிடப்பேசிகளைப் பெற செவித்திறன், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் இலவசமாக வழங்கப்படும் செல்லிடப்பேசிகளைப் பெற செவித்திறன், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாா்வையற்ற, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் செல்லிடப்பேசிகள் (ஸ்மாா்ட்போன்) வழங்கப்படவுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞா்கள், கல்லூரியில் பயிலும் மாணவா்கள், சுயதொழில் புரியும் பாா்வையற்ற, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இந்த செல்லிடப்பேசிகளை பெற தகுதியுடையவா்கள் ஆவா்.
தகுதியுடையவா்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பணிச் சான்று (கல்லூரியில் பயில்பவராயின் படிப்புச் சான்று), வேலையில்லா பட்டதாரி எனில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுச் சான்று, சுயதொழில் புரிபவராயின் சுயதொழில் புரிவற்கான சான்று, பாஸ்போட் அளவு புகைப்படம் 2 போன்ற ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் சென்று, அங்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். தகுதியானவா்கள் ஜனவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.