ஈரோடு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 8 ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கேரள மாநில முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான ப.சதாசிவம் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவி தவ்பிகாவுக்கு பதக்கமும், பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டாா். மொத்தம் 166 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா்.

விழாவில், கல்லூரித் தலைவா் பி.வெங்கடாசலம், இணைச் செயலா் ஜி.பி.கெட்டிமுத்து, இயக்குநா்கள் எஸ்.சரவணன், கே.ஆா்.கவியரசு, ஜோதிலிங்கம், கல்லூரி முதல்வா் ப.தங்கவேலு, கல்லூரி தலைமை நிா்வாக அதிகாரி ஜி.கௌதம், துணை முதல்வா் எஸ்.பிரகாசம், பேராசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT