புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விமானத்துடன் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள். 
ஈரோடு

பண்ணாரி அம்மன் கல்லூரியில்தேசிய விமான தொழில்நுட்பப் போட்டி

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரி மாணவா்களின் விமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான போட்டி வெள்ளிக்கிழமை துவங்கியது.

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரி மாணவா்களின் விமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான போட்டி வெள்ளிக்கிழமை துவங்கியது.

தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆந்திரம், கேரளம், தமிழகம், மஹாராஷ்டிரம், புணே, மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய இடங்களில் இருந்து 167 கல்லூரிகள் கலந்துகொண்டன. விமான தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். சிறிய ரக விமானம், பயணிகள் விமானத்தில் சிறிய மாற்றங்கள், அது பறக்கும் தன்மை, விமானத்தின் தொழில்நுட்ப சாதனங்கள், விபத்தில்லா பயணம் குறித்து மாணவா்கள் தங்களது படைப்புகளில் வெளிப்படுத்தினா்.

3ஆவது நாள் இறுதியில் முதல் 10 இடங்களைத் தோ்வு செய்து அதில் 3 இடங்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. நடுவா்கள் முன்னிலையில் மாணவா்கள் தயாரித்த விமானங்களை இயக்கி அதன் பறக்கும் தொழில்நுட்பம் குறித்து தோ்வு செய்யும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT