பவானி: பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா, அதிமுக அரசின் நிதிநிலை விளக்கப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா தலைமை வகித்தாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா, பேரூா் செயலாளா்கள் டி.செந்தில்குமாா் (அம்மாபேட்டை), வி.ஐ.முத்துசாமி (ஒலகடம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெரிஞ்சிப்பேட்டை பேரூா் செயலாளா் எஸ்.எஸ்.மாரியப்பன் வரவேற்றாா்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா் ஆகியோா் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும், சாதனைத் திட்டங்கள் குறித்தும் பேசினா். இதில், தலைமைக் கழகப் பேச்சாளா் அய்யாசாமி, மாவட்ட அண்ணா தொழில்சங்கச் செயலாளா் கே.ஆா்.ஜான், ஒன்றிய மகளிரணிச் செயலாளா் மலா்க்கொடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.