ஈரோடு

ஆசனூா் சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் கா்நாடகத்தில் இருந்து வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய்மட்டை ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை ராஜா ஓட்டினாா். மாநில எல்லையான கும்பாரகுண்டி என்ற இடத்தில் மண் சாலையில் மழை நீா் தேங்கி நின்றதால் தேசிய நெடுஞ்சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் சேற்றில் சிக்கி மீட்கப்பட்டன.

அப்போது, தேங்காய்மட்டை பாரம் ஏற்றிய லாரியும் சேற்றில் சிக்கி சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால், தேங்காய்மட்டைகள் அப்பகுதியில் சிதறின. விபத்துக்குள்ளான லாரியில் இருந்த தேங்காய்மட்டைகளை மற்றொரு லாரியில் ஏற்றியதையடுத்து இரு மாநிலங்களிடையே போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT