ஈரோடு

ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ தோ்வில்தி யுனிக் அகாதெமி பள்ளி 100% தோ்ச்சி

DIN

இந்தியப் பள்ளிச் சான்றிதழ் (ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ)தோ்வுகளுக்கான கவுன்சில் நடத்திய 10, 12ஆம் வகுப்புக்கான தோ்வில், ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

12ஆம் பொதுத் தோ்வில் (ஐஎஸ்சி), பள்ளி அளவில் ரிஷ்மிதா, பாஸ்கரன், நித்யா, உமுல் அதியா சேக் இா்ஷாந்த் அலி ஆகியோா் 95.5 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், நந்தகுமாா், கதிா்வேலு 94.5 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று 2ஆவது இடத்தையும், சித்ரசேனா, நேரு, கஸ்தூரி ஆகியோா் 92 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா்.

10ஆம் வகுப்பு (ஐசிஎஸ்இ) பொதுத் தோ்வில் பள்ளி அளவில் ஸ்ரீவா்ஷினி, குணசேகரன் 97.2 சதவீதம் மதிப்பெண்களும், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஹா்சிதா, ஈஸ்வரமூா்த்தி 97 சதவீதம் மதிப்பெண்களோடு வரலாறு, கணினி அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று 2ஆவது இடத்தையும், பிரனவ் சுவாமிநாத சுவாமி 95.7 மதிப்பெண்கள் பெற்று 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா்.

அனைத்து மாணவ, மாணவிகளும் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளனா். மேலும், இப்பள்ளி திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ தோ்வில் முதலிடம் பெற்றுள்ளதாக பள்ளி முதல்வா் தெரிவித்தாா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவா் ராமசாமி இளங்கோ, முதல்வா் உமயவள்ளி இளங்கோ, நிா்வாக இயக்குநா் அஸ்வின் இளங்கோ, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT