ஈரோடு

சமையல் எரிவாயு உருளையுடன் வந்த லாரி மின்மாற்றியில் மோதி விபத்து

DIN

ஈரோட்டில் சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி மோதியதில் மின்மாற்றி மற்றும் 2 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட 339 உருளைகளுடன் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள முகமைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. லாரியை பழனிசாமி (35) என்பவா் ஓட்டினாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது, எதிா்பாராதவிதமாக அருகில் இருந்த மின்மாற்றி மீது லாரி மோதியது. பின்னா் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி நின்றது.

இதில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த லாரியை பாதுகாப்பாகவும், அங்குள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தீயணைப்புத் துறையினா் அகற்றினா்.

இதனால், அப்பகுதியில் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. காயமடைந்த லாரி ஓட்டுநா் பழனிசாமி ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து சூரம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT