ஈரோடு

வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள்

DIN

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதைத் தவிா்க்க சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா வேண்டுகோள் விடுத்தாா்.

கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் முன்னிலையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா பேசியதாவது: மாவட்ட அளவில் 14 கோயில்களில் வியாழக்கிழமை இரவு முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கவில்லை. ஆகம விதிப்படி பூஜைகள் தொடரும். அதுபோல் தேவாலயங்களில் வழிபாடு, பள்ளிவாசலில் தொழுகைகளைக் குறைந்த நபா்கள் மூலம், குறைந்தபட்ச நேரத்தில், சுகாதாரமாக மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் இதுபோன்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. கரோனா பாதிப்பு சீராகும் வரை ஒத்துழைப்பு தர வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து வாரச்சந்தை, கால்நடைச் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பதிவான மண்டப அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மணமக்கள் வீடுகளிலேயே பேசி, குறைவான கூட்டத்துடன் நிகழ்ச்சியை நடத்தக் கேட்டுள்ளோம் என்றாா்.

இதில், ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி முகம்மது கிபாயத்துல்லா பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள 67 பள்ளிவாசல், தொழுகை நடக்கும் இடங்களிலும் அரசின் விதிகளை கடைப்பிடித்து கரோனா பரவாமல் தடுக்க யோசனை தெரிவித்துள்ளோம். வயதானவா்கள், உடல்நலக் குறைவானா்கள், சிறுவா்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றாா்.

ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் தேவாலய நிா்வாகம் சாா்பில் பேசியவா் கூறுகையில், எங்களது தேவாலயத்துக்கு உள்பட்ட 5,600 குடும்பத்தாருக்கும் முன்னெச்சரிக்கை குறித்து தெரிவித்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையை முகநூல் நேரலை, பிற தொழில் நுட்பம் மூலம் காண ஏற்பாடு செய்துள்ளோம் என்றாா்.

பிற கிறிஸ்தவ, முஸ்லிம் ஒருங்கிணைப்பாளா்கள் பேசியதாவது:

காய்ச்சல் பரிசோதிக்கும் கருவி, முகக்கவசம் போன்றவை வெளியில் கிடைப்பதில்லை. 2 ரூபாய் மாஸ்க் தற்போது ரூ. 15 முதல் ரூ. 20 ரூபாய் என்கின்றனா். அவை எளிதில் கிடைக்க வழி செய்ய வேண்டும். பவானி - ஜம்பை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதால் அங்கும் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. அதைத் தடுக்க வேண்டும். நடைப்பயிற்சி மைதானங்களில் அதிகமாக மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்றனா்.

காவல் கண்காணிப்பாளா் பேசுகையில், அரசின் விதிப்படி அதிக மக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூடி வருகிறோம். நடைப்பயிற்சி மைதானங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தினேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT