ஈரோடு

இருமாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தம்: வெறிச்சோடிய புளிஞ்சூா் சோதனைச் சாவடி

DIN

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு மாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் புளிஞ்சூா் சோதனைச் சாவடி பகுதியில் சாலை வெறிச்சோடியது.

தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு, பெங்களூரு, கொள்ளேகால் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சத்தியமங்கலம் வழியாக தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல, கா்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூா், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் வழியாக இரு மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருமாநில எல்லையில் உள்ள கா்நாடக மாநிலத்துக்குச் சொந்தமான புளிஞ்சூா் சோதனைச் சாவடி பகுதி போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இரு மாநில அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT