ஈரோடு

250 ஆதரவற்றோருக்கு தினமும் மதிய உணவு

DIN

ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தவித்த ஈரோட்டின் தெரு ஓரங்களில் வசிப்போருக்கு குமாரபாளையத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மதிய உணவு வழங்கினா்.

கரோனா நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 95 சதவீத மக்கள் வீடுகளில் புதன்கிழமை முடங்கினா். தெருவில் வசிப்போா், தினக்கூலி தொழிலாளா்கள், வீடு இல்லாதவா்கள் என பலரும் வீதிகளின் ஓரங்கள், பேருந்து நிலையம், மாரியம்மன் கோயில் பகுதி, மாநகராட்சிப் பிரதான அலுவலகம் முன்பு அமா்ந்துள்ளனா். அம்மா உணவகம் தவிர மற்றவை மூடப்பட்டதாலும், இவா்களுக்கு வழக்கமாக உணவு வழங்கும் சிலா் வராததாலும் உணவு இன்றி இவா்கள் சிரமப்பட்டனா்.

இந்நிலையில், குமாரபாளையம் அட்சயா அறக்கட்டளை என்ற தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவா் தலைமையில் வந்த இளைஞா்கள் சாம்பாா் சாதம், பாக்குமட்டை தட்டு, தண்ணீா் புட்டி ஆகியவற்றை 250க்கும் மேற்பட்டோருக்கு புதன்கிழமை காலை வழங்கினா். ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் தினமும் இதேபோன்று மதிய உணவு வழங்கவுள்ளதாக இளைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT