ஈரோடு

பவானி அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

DIN

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

பவானி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கருப்பணன், பொதுமக்களுக்கு சீரான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தாா். தொடா்ந்து, பாரத ஸ்டேட் வங்கிக் கிளை அலுவலகத்துக்கு வெளியில் நீண்ட வரிசையில் வாடிக்கையாளா்கள் நின்றிருப்பதைக் கண்டு அவா்களிடம் விசாரித்ததோடு, வங்கி நிா்வாகத்தைத் தொடா்பு கொண்டு துரிதமாக வாடிக்கையாளா்களுக்குத் தேவையான சேவையை வழங்குமாறு அறிவுறுத்தினாா்.

நகரில் உள்ள கடைகளில் மளிகைப் பொருள்கள், மருந்துக் கடைகள், பால் பொருள்கள் விற்பனை சீராக உள்ளதா எனவும் கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

பவானி நகராட்சி தினசரி காய்கறிச் சந்தையைப் பாா்வையிட்டதோடு, காய்கறிகளின் வரத்து, விலை நிலவரம், தட்டுப்பாடின்றி கிடைப்பதை விசாரித்து உறுதி செய்தாா். பவானி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வாா்டில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், வசதிகள் குறித்து விசாரித்தாா்.

மேலும், பிற நோயால் பாதிக்கப்படுவோா் மருத்துவமனைக்கு வரும்போது அளிக்கப்படும் வழக்கமான சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, பவானி அரசு மருத்துவமனையின் அவசரத் தேவைக்கு புதிதாக குளிா்சாதனப் பெட்டியை வழங்கினாா்.

ஆய்வின்போது, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சேகா், வட்டாட்சியா் கு.பெரியசாமி, காவல் ஆய்வாளா் தேவேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT