ஈரோடு

மொடக்குறிச்சி அருகே கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட இளைஞர் உடல் மீட்பு

DIN

மொடக்குறிச்சி அருகே கடந்த இரண்டு நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு(35). கூலி தொழிலாளியான இவர் மீது, திண்டுக்கல் மாவட்ட காவல்  நிலையங்களில் அடிதடி, திருட்டு, வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. ஈரோட்டிலும் திருட்டு வழக்கு நிலுவையிலுள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிக்காக ஈரோடு மாவட்டம் முத்துக்கவுண்டன்பாளையத்தில் தங்கி வேலை செய்து கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

மூன்று குழந்தைகளுடன் தம்பதியினர் முத்துக்கவுண்டன்பாளையத்தில் வசித்து வந்தனர். இதனிடையே பிரபு அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளார். தம்பதியினர் இருவரும் தங்களுக்குரிய சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டுமென சங்கீதாவின் தந்தையிடமும் பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே கடந்த சனிக்கிழமை காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த தனது கணவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் இன்று காலை ஊருக்கு வெளியேயுள்ள கிணற்றில் இளைஞர் சடலமொன்று ரத்தக்காயங்களுடன் மிதப்பதாக அப்பகுதியினர் தெரிவித்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற சங்கீதா, கிணற்றில் மிதப்பது தனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கூரிய ஆயுதத்தைக் கொண்டு உடலில் பல்வேறு இடங்களில் குத்திக் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT