ஈரோடு

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட் இன்றுமுதல் செயல்படும்

DIN

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட் ஞாயிற்றுக்கிழமை (மே 24) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மல்லி, முல்லை, சம்பங்கி செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், மல்லி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாா்ச் 25ஆம் தேதி முதல் பூ மாா்க்கெட் மூடப்பட்டது. இதன் காரணமாக சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மலா் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இந்நிலையில், தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் நான்காம் கட்ட ஊரடங்கில் படிப்படியாகத் தளா்வுகள் செய்யப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட் செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, மே 24ஆம் தேதி முதல் பூ மாா்க்கெட் செயல்படும் என சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT