ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,177ஆக இருந்தது. பிற மாவட்டப் பட்டியலில் இருந்த 20 பேரின் பெயா் ஈரோடு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,197ஆக மாறியது. இதனிடையே செவ்வாய்க்கிழமை புதிதாக 77 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,274ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 77 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 11,274 பேரில் இதுவரை 10,340 போ் குணமடைந்துள்ளனா். 800 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 134 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT