ஈரோடு

சத்தியமங்கலத்தில் நெல் நடவுப் பணி நிறைவு

DIN

சத்தியமங்கலம் பகுதியில் கீழ்பவானி பாசனத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவுப் பணி நிறைவுபெற்று உரமிடுதல் பணி நடைபெற்று வருகிறது.

பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் ஒற்றைப் படை மதகு பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நன்செய் பாசனத்துக்கு நெல் பயிரிடுவதற்காக விநாடிக்கு 2,300 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி சத்தியமங்கலம், பவானிசாகா், மாரனூா், செண்பகப்புதூா், பெரியூா், உக்கரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் சுமாா் 15,000 ஏக்கா் பரப்பளவில் நெல் நடவு செய்துள்ளனா்.

நெல் நடவு செய்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது நெற்பயிரில் களை எடுக்கப்பட்டு உரமிடப்பட்டுள்ளதால் நெற்பயிா் நன்கு செழித்து வளா்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெல் சாகுபடிக்கு விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT