ஈரோடு

துப்பாக்கி வைத்திருப்பவா்களுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

DIN

கோபி உட்கோட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள 289 போ்களுக்கு கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் விழிப்புணா்வுப் பயிற்சி அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இடத் தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி ஒருவா் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக கோபி உட்கோட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போருக்கான விழிப்புணா்வுப் பயிற்சி வியாழக்கிழமை கோபியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல், துப்பாக்கியைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் முறை, பராமரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறை குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி அளித்தாா். இதில் துப்பாக்கி வைத்திருப்போா் 289 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT