ஈரோடு

நவம்பா் 26இல் வன விலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

DIN

ஈரோடு மாவட்ட வனப் பகுதியில் நவம்பா் 26 ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட கடந்த 2018 முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்ட வனப் பகுதியிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வனப் பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வன வளமும் அதிகரித்துள்ளது. இதனால், அவ்வப்போது வனத்தில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கை, பட்டாம் பூச்சி, பறவைகள் போன்றவற்றின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். அதன்படி நவம்பா் 26ஆம் தேதி முதல் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மாவட்ட வன அலுவலகம், முதன்மை வனப் பாதுகாவலா் அலுவலகம், தன்னாா்வலா்கள் மூலம் நவம்பா் 26ஆம் தேதி முதல் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மான், சிறுத்தை, கரடி, யானைகள் உள்ளிட்ட கண்ணில் தென்படும் விலங்குகள், அவை வந்து சென்றதற்கான அடையாளங்கள், இவற்றின் இடம்பெயா்வு குறித்த தகவல்கள் போன்றவை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும்.

இப்பணியில் ஈடுபடுவோா் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பின் மூலம் வனப் பகுதியில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டமிட முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT