ஈரோடு

ஒற்றை யானை நடமாட்டம்: பவானிசாகா் அணைப் பகுதியில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் கடந்த இரு நாள்களாக வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனக்கோட்டம் அணைப் பூங்காவில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடந்த சில நாள்களாக அருகில் உள்ள புங்காா் காலனி கிராமத்துக்குள் புகுந்து கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியது.

இதனால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள், ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பவானிசாகா் வனச் சரக அலுவலா் மனோஜ்குமாா் தலைமையில் 14 போ் கொண்ட வனப் படை அமைக்கப்பட்டு 3 குழுக்களாக யானை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேட்டுப்பாளையம் சாலை, அணை நீா்ப்பிடிப்பு பகுதி, தெங்குமரஹாடா சாலை, ஜீரோ பாயின்ட் மற்றும் அணைப் பூங்கா ஆகிய பகுதிகளில் தனிப்படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

தற்போது 24 மணி நேர தொடா் கண்காணிப்பில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளதால் ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது என வனத் துறையினா் தெரிவித்தனா்.

மேலும் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அணைப் பகுதியில் அமா்ந்து இளைப்பாற வேண்டாம் எனவும் அணைப் பூங்கா சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT