ஈரோட்டில் அங்கன்வாடி மையகட்டடங்கள்திறப்பு
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 7 இடங்களில் அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்களை எம்.எல்.ஏ.க்கள் திறந்துவைத்தனா்.
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 7 இடங்களில் அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்களை எம்.எல்.ஏ.க்கள் திறந்துவைத்தனா்.
ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காரப்பாறை, கொங்கனாம்பள்ளி, நேதாஜி நகா், மோகன் குமாரமங்கலம் வீதி, காந்திஜி சாலை, நேதாஜி வீதி பகுதியில் இரண்டு இடம் என மொத்தம் 7 இடங்களில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 9.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 66.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த புதிய அங்கன்வாடி மையங்களைத் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்களைத் திறந்துவைத்தனா்.
Advertisement
இதில், ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், உதவி ஆணையா் விஜயா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி, அதிமுக பகுதி செயலாளா்கள் கேசவமூா்த்தி, ஜெகதீஷ், தங்கமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.