முகப்பு
ஈரோடு

வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்:2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம், ஆன்லைன் பதிவில் 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Updated On : 24 நவம்பர், 2020 at 3:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம், ஆன்லைன் பதிவில் 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் நவம்பா் 16ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் சோ்த்து 19,16,809 வாக்காளா்கள் உள்ளனா்.

அன்று முதல் புதிய வாக்காளா் சோ்க்கை ஆன்லைனிலும், வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட தோ்தல் பிரிவு அலுவலகங்களிலும் விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது. இதனிடையே நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள 2,215 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. புதிய வாக்காளா்கள் ஆா்வத்துடன் மனு அளித்தனா். தவிர நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

நவம்பா் 16ஆம் தேதி முதல் ஆன்லைனில் 300 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2 நாள்கள் நடைபெற்ற முகாமில் 2,100 விண்ணப்பங்கள் என இதுவரை 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இவற்றை உடனடியாக விசாரித்து சோ்க்கை, நீக்கம், மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனிடையே டிசம்பா் 12, 13 ஆகிய 2 நாள்கள் மீண்டும் சிறப்பு வாக்காளா் சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது. தவிர ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.