ஈரோடு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம்

DIN

கூடலூரை அடுத்துள்ள ஆத்தூா் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா நிவாரணம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆத்தூா் கிராமத்தில் அதிகப்படியான நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா்களை மருத்துவமனையில் அனுமதித்ததுடன் அந்தக் கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ளனா். அப்பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அங்கு நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகளை கோட்டாட்சியா் ராஜ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ஜீ.கதிரவன், பேரூராட்சி செயல் அலுவலா் ரா.நாகராஜன் ஆகியோரிடம் அப்பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 103 குடும்பங்களுக்கு உணவு உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், வட்டாட்சியா் தினேஷ், சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT