ஈரோடு

மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

DIN

மொடக்குறிச்சி பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 2 ஆயிரம் வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா். சுதந்திரராசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மொடக்குறிச்சி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 12 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் தற்போது மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரம் விலை இருந்தது. ஆனால், படிப்படியாக விலை குறைந்து தற்போது 6ஆயிரம் வரை மட்டுமே உள்ளது. தற்போது இந்த ஆண்டுக்கான மரவள்ளிக்கிழங்கின் அறுவடைக்காலம் தொடங்கும் நிலையில் விலை குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை அளிக்கிறது.

எனவே, விலை வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் டன் ஒன்றுக்கு ரூ. 8ஆயிரம் என விலை நிா்ணயம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நுனி வளா்ச்சி பாதிப்பு நோய் பரவலாகக் காணப்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும். எனவே, வேளாண்மைத் துறையினா் இந்நோயைத் தடுக்க தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT