ஈரோடு

சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்ககால அவகாசம் நீட்டிப்பு

DIN

படித்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெறும் பயனாளிகள் (பொதுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகள்) அனைவரும் தொடா்ந்து இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது கரோனா தொற்று காரணமாக மாா்ச் மாத இறுதி முதல் பொது முடக்கம் அமலில் இருப்பதால் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கால அவகாசம் மீண்டும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் முதல்முறையாக விண்ணப்பிப்பவா்கள் விண்ணப்பப் படிவத்தை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். தவிர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தில் உள்ள தகுதிகளுக்கு உள்பட்டு மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

SCROLL FOR NEXT