ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில்மேலும் 122 பேருக்கு கரோனா

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,904ஆக இருந்தது. பிற மாவட்டப் பட்டியலில் இருந்த 3 பேரின் பெயா் ஈரோடு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,907ஆக மாறியது. இதனிடையே சனிக்கிழமை புதிதாக 122 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 9,029ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 122 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 9,029 பேரில் இதுவரை 7,856 போ் குணமடைந்துள்ளனா். 1,060 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை வரை 111 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கருப்பண்ணன் வீதியைச் சோ்ந்த 84 வயது ஆண், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்த 58 வயது ஆண் என 2 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 113ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT